Saturday, December 18, 2010

எனது அமெரிக்கப் பயணம்-லண்டன் செல்லும் விமானத்தில்... (தொடர்ச்சி)

லண்டன் செல்லும் விமானத்தில்... (தொடர்ச்சி)


1) Dabangg படத்தை செலக்ட் பண்ணி முன்திரையில் கண்டேன். சத்ருக்கன் சின்ஹாவின் மகளை அதிகமாகப் புறமுதுகு காட்ட வைத்திருந்தார்கள்.
2) ஒன்ஸ் போகலாமென்று போய் நின்றால், நமக்கு வரும் போதெல்லாம் மத்தவங்களுக்கும் வந்து Occupied என்று toilet காட்டிக்கொண்டிருந்தது! அதை நினைத்து (நனைத்து!?) ஆத்திரம் வந்த போது, தேவையில்லாமல் "ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது" என்ற பழமொழி ஞாபகம் வந்து மேலும் ஆத்திரம் கூடியது.

3)ஒரு வழியாக vacant ஆகி உள்ளே போய் வேலை முடிந்ததும், Flush பட்டன் அழுத்தியதும் என்ன ஆகும் என்று சிந்தனை ஓடியது. கண்டிப்பாக ரயிலில் விழுவது போல் விழாது என்று மட்டும் தெரிந்தது. உலகம் நாறிவிடும்!

4) சின்ன வயதில் படித்த "தொப்பி வியாபாரியும் குரங்குகளும் கதை தான் இந்த வயதிலும் கை குடுக்கிறது. முன் சீட் பெண் நல்ல விஷுவல்சுடன் ஒரு டாகுமெண்டரி பார்த்தால், நாமும் தேடிப்பிடித்து அதைப் பார்ப்பது, பக்க வாட்டு சீட்டில் பாட்டி ப்ளேனின் கொல்லைப் புறத்தில் போய் காபி வாங்கி வந்தால் நாமும் வாங்கிக் குடிப்பது என்பவை சில உதாரணங்கள்!  'நரியும் மாடுகளும்', 'வழி விடா/விடும் ஆடுகள்' கதைகளையும் எல்லோரும் கடை பிடித்தால் நல்லது. புரியாத வயதில் அக்கதைகளைச் சொல்லிக்கொடுத்து வீணடிக்கிறார்கள். சில மாற்றங்கள் செய்து பத்தாவது அல்லது 
பன்னிரண்டுக்கு மாற்றலாம்!

5) கண்ணை மூடக் கொடுக்கும் துணிக் கண்ணாடி மாட்டிக்கொண்டதும் கண்ணை கட்டிக் காட்டில், இல்லை, காற்றில் விட்டது போல் ஆகிவிடுகிறது!

6) விமானத்தில் announce பண்ணுவதில் ஆங்கிலத்தில் சொல்வது கூடப் புரிகிறது, ஆங்கிலம் போல் ஒலிக்கும் தமிழில் சொல்வது 
புரியவில்லை. "பய்னிகள் இர்க்கை பெல்டை அன்து கொல்லவும்". தமிழ்க் கொலை செய்யும் அந்தப் பெண்ணைத் தான் ...

7) ஆடியோ செக்சனில் Opera கேட்டுப் பார்த்தேன். பாடும் ஆணையும் பெண்ணையும், ஒரு மீன் பிடி வலையில் உட்கார வைத்து 
காஷ்மீர் தால் ஏரியில் முக்கி முக்கித் தூக்கி 'அ ஆ இ ஈ' சொல்லச் சொன்னது மாதிரித் தோன்றியது. 


Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/1.html

No comments:

Post a Comment