Sunday, January 2, 2011

எனது அமெரிக்கப் பயணம்-லண்டனிலிருந்து டல்லாஸ் - பகுதி 2


ஒரு வழியாக டல்லாஸ் போவதற்கு விமானத்தில் ஏறியாகி விட்டது. எனக்கு ஒரு சீட் தள்ளி உட்கார்ந்தது நம்ம ஊருப் பையன். பெயர் ஹேமந்த். வெட்டிப் பீட்டர் விடாமல் நேரடியாகத் தமிழில் பேசினேன். அவன் ஊர் சித்தூர். படித்தது பாண்டியில்,அதனால் தமிழ் சரளம். 4 வருடம் மென்பொருள் வேலை. இப்போது U.Sல M.B.A படிப்பு. நாங்கள் கலகலப்பாகப் பேச ஆரம்பித்ததும், ஹேமந்த் ”அங்க ஒருத்தர் தனியா இருக்காரு. அவரயும் கூப்பிடலாம்,அவரு முதல் தடவ ட்ராவல் பண்றாரு” என்றான்.  
    
ஏர் ஹோஸ்டஸ் கிட்ட சொல்லி அந்த ’அவரை’ எனக்கும் ஹேமந்த்துக்கும் இடையில் இடம் மாற்றினோம். உட்காரப் போகும் போது, அவர் “நீங்க A.K.Collegeல் படிச்சீங்களா?” என்றார். நான் படிக்கும் போது ஜீனியர் ஆக இருந்து, பின் அங்கு வேலை பார்க்கும் போது மாணவராக இருந்தவர். மேலும் முகிலனின் சொந்த ஊர் தேனிப் பக்கம் தான். 
     மேலே உள்ள 2 பாராக்களுக்கு நீங்கள் ‘நடு வானில் நண்பன்’ என்ற தலைப்பைச் சூட்ட விரும்பினால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. 
    
     பசி குடலைப் பிடுங்கியது. முகிலனுக்கும்,ஹேமந்த்துக்கும் அதே நிலை.
அவர்களிடம் என்ன இப்படி வானத்தில அம்மா பசிக்குதேன்னு சொல்ல வச்சிட்டாங்க என்று முனகினேன். ஒரு வழியாக ஜீஸ் கொண்டு வந்தார்கள். 
பச்சையாகக் கேட்டேன், “Will you bring the other stuff" என்று. இந்தக் கேள்வியைக் கேட்ட போது, வலது கையை வாய்ப் பக்கம் கொண்டு போகும் நம்மூர் சைகையைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.இந்தப் பயணத்தில் என் நகைச்சுவை உணர்வு வறண்டு போனது அச்சமயம் தான்.பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பார்களே! (அந்த பத்து எது என்று நண்பர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும்)    
  
     
I hate luv storys.என்னடா இவன் திருந்திட்டான்னு நினைக்கிறீங்களா? அது நான் சாப்பாடு முடிஞ்சதும் பார்த்த ஹிந்திப் படம். கரன் ஜோஹர் இயக்கம்.
வித்தியாசமாகப் போய்க் கொண்டிருந்தது.அதன் முடிவைப் பார்த்தால் தான் என்க்குத் தூக்கம் வரும் என்பது போன்ற ஈடுபாட்டை அப்படம் ஏற்படுத்தவில்லை. அதனால் நானும் முழுதும் பார்க்கவில்லை.
   
  ஆடியோ செக்‌ஷனில் பிரிட்டன் டாப் 40 நன்றாகத் தூங்க வைத்தது.அதற்குக் காரணம் அப்பாடல்களின் தாள நயம். 
    டாய்லெட்டில் ஒரு போஸ்டரில் ”As a courtesy to the next passenger please wipe the wash basin with a sheet", என்று போட்டிந்தார்கள். நல்ல வேளை அதோடு விட்டார்கள் என்று தோன்றியது. 

      டல்லாஸ் வந்திறங்கி, இம்மிக்ரேசன் வரிசையில் நாங்கள் மூவரும் ஒன்றாக நின்றிருந்தோம்.என் முறை வந்து, இம்மிக்ரேசன் ஆஃபிசர் கேள்விகளுக்குச் சமத்தாகப் பதில் சொல்லி, I 94 துண்டு சீட்டில் சீல் வாங்கிக் கொண்டு... தேடினால், முகிலனையும், ஹேமந்தையும் காணவில்லை. அவர்களின் டெஸ்டினேசன் டல்லாஸ் தான்.
எனக்கு டெட்ராய்ட் போவதற்கு 2 மணி நேரம் இருந்தது. மெல்ல ஏர் போர்ட்டைச் சுற்ற ஆரம்பித்தேன். ஒரு இடத்தில் Star bucks coffee shop இருந்தது. என்னுடைய பிரியமான Coffee mocha (மோக்கா) வாங்கிக் குடித்தேன்.   

  சற்று தள்ளி ஓரிடத்தில் ஓசி இண்டர்நெட் வசதி இருந்தது.20 நிமிடத்தில் ஆட்டோமேடிக்காக லாக் ஆஃப் ஆகி விடும்.மெயில்ஸ் பார்த்துக் கொண்டிருந்த போது, பக்கத்திலிருந்து யாரோ விழுந்து விழுந்து சிரிப்பது போல் சத்தம் வந்தது. பக்கத்தில் ப்ரொவ்ஸ் செய்து கொண்டிருந்த பாட்டியை சந்தேகத்தோடு பார்த்தேன். பாட்டி அதே சந்தேகப் பார்வையோடு என்னைப் பார்த்தது.ப்ரொவ்ஸிங் முடித்து விட்டு நடக்க ஆரம்பித்தால் பக்கத்தில் ஒரு கடை வாசலில் ஒரு நாய்க் குட்டி பொம்மை உருண்டு உருண்டு மனிதக் குரலில் சிரித்துக் கொண்டிருந்தது. ரொம்பப் பிடித்திருந்தும் எனக்கு வாங்கத் தோன்றவில்லை.

    ஒரு இடத்தில் massage chair ஒன்று இருந்தது. அங்கு போஸ்டர் for first class passenger என்றது. ஒரு டாலருக்கு 3 நிமிடம் முதுகு பிடித்து விடுமாம்.சென்னை ட்ரேட் செண்டரில் exhibition போகும் போது நன்றாக நடந்து சுற்றி விட்டு, அந்த மசாஜ் சேரைப் பற்றித் தெரியாதது மாதிரிக் காட்டிக் கொண்டு மசாஜ் செய்து கொள்வேன். அந்த நுட்பத்தை Houstonலும் பயன் படுத்தி இருக்கிறேன். ஆனால் இம்முறை ஒரு டாலர் போட்டு முதுகு பிடிக்கப் பட்டேன். 

     திரும்பி வரும் போது, இதே டல்லாஸில் ஆள் பிடித்து விடும் மசாஜை வேடிக்கை பார்த்தேன். அது பற்றிப் பின்னால் விளக்குகிறேன். 


Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/blog-post.html


No comments:

Post a Comment