Sunday, January 2, 2011

எனது அமெரிக்கப் பயணம்-டல்லாஸிலிருந்து டெட்ராய்ட்டுக்கு


டல்லாஸ் விமானத்தில் ஏறும் போது, ஏதோ நம்மூர் ஹவுசிங் போர்ட் சிறு ஃபிளாட்டில் நுழைவது மாதிரி இருந்தது. domestic flight என்பதால் சிறி தாக இருக்கிறது என்று நினைத்தேன். இந்த மாதிரி சின்ன flight நம்மளப் போல்
சாதாரண உயரம் உள்ள ஆளுகளக் கொஞ்ச நேரம் அமிதாப் போல உணர வைக்கும்.     

   பைலட் அறிவித்துக் கொண்டிருந்தார்,டல்லாஸில் Central டைம், டெட்ராய்டில் Eastern டைம் என்று. எது எந்த டைம் ஜோனில்
இருந்தாலும்,எனக்குப் பசி டைம். இன்னும் 2.30 மணி நேரம் தாக்குப் பிடிக்க வேண்டும்.அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஒரு காம்ப்ளிமெண்டரி ட்ரிங்ஸ் கூடக் கொடுக்கவில்லை.விலைக்கு வாங்கி
சாப்பிடனுமாம்.இவங்க யானை விலை சொல்வானுக. ”யார் கிட்ட?போங்கப்பு”.ஆனால் நிலைமை “வழியல ஏதாவது சீப் ஹோட்டல் வந்தா நிப்பாட்றீங்களா” என்று கேட்கலாம் போல் இருந்தது.

    பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் ஸ்பீக்கர்ஸ் ஒலி நன்றாகத் தெளிவாகக் கேட்க முடிந்தது. ஆனால் அமெரிக்கன் ஏர்லைன்ஸின் ஸ்பீக்கர்ஸ் ஒலியைக் கேட்டதும், நம்ம ஊரில் இரவு நேரம் சாலை ஓரம் விளக்கு வைத்துக்
கொண்டு “அதில பாருங்க சார்” என்று அடித்தொண்டையில் லேகியம் விற்பவரின் மைக் ஒலி தான் ஞாபகம் வந்தது. 

    பக்கத்தில் உட்கார்ந்து இருந்தது ஒரு டாக்டர்.(அவர் சொன்னது தான்.உண்மையில் அவர் நர்ஸாக இருந்தால் யாருக்குத் தெரியும்.) ட்ராய் (நான் தங்கப் போகும் சிட்டி) க்ளைமேட் பத்தி ஏதோ ஒரு சின்னக் கேள்வியைக் கேட்கப் போயி, மனுஷன் T.V ல வெதர் ரிப்போர்ட்டர் கணக்கா ஒரு பத்து நிமிஷம் U.S ன் பல ஸ்டேட்ஸ் க்ளைமேட் சொன்னார். எனக்கே நான் என்னைப் போல ஒரு ஆளிடம் மாட்டிக் கொண்ட மாதிரி
இருந்தது. 

      மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷனைப் பற்றிக் கேட்டேன்.இந்தியாவில் B.P.O இண்டஸ்ட்ரி இதைப் பெரிய அளவில் பணணி கொண்டிருக்கிறது.அப்படி உன்ன மாதிரி டாக்டர்ஸ் இன்னா சொல்றீங்கோ,அதைக் கேட்டு எங்காளுங்க எழுத்தில அடிக்றாங்கோன்னு கேட்டேன். நாங்க பேஷண்ட்ஸ் மெடிக்கல் ஹிஸ்டரி, டயக்னாஸிஸ் எல்லாம் சொல்லி ரெக்கார்ட் பண்ணிக் கொடுப்போம் என்றார் அவர். ஸ்பீச் டு டெக்ஸ்ட் சாஃப்ட்வேர் இருக்கே அதப் பயன் படுத்தலாமே என்றேன்.அதேல்லாம் நிறையத் தப்பு விடும் என்றார்.மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷன் ஆஸ்திரேலியா,ந்யூசிலாந்த் போன்ற நாடுகளிலும் பண்ணப் படுவதாய் டாக்டரய்யா சொன்னார்.   

       விமானம் மேலெலும்பி நாம் வழக்கமாய் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கும் உயரம் வந்த போது...வாவ்.டல்லாஸின் இரவு நேரத்துப் பரப்பளவு தெரிந்தது.(பகலில் பரப்பளவு மாறவா போகுது). இரவில் மின் விளக்குகளின் ஒளிகள், சிதறிக் கிடக்கும் தங்க,வைர நகைகள் போல ஜொலித்தன.

      gizmag.com வெப் சைட்டில் படித்த ஒரு செய்தி ஞாபகம் வந்தது.அதைப் பற்றி டாக்டரிடம் கேட்டேன்.(இப்போது என் முறை.வெதர்
ரிப்போர்ட் சொல்லிக் கடுப்படித்தற்குப் பழி).நம் உடம்பில் உள்ள செல்கள் ஏஜிங் ஆகும் வேகத்தைக் குறைக்கப் பரிசோதனை செய்கிறார்கள். ஊருக்கு இளச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல இதயும் அப்பாவி எலியை வைத்துப் பரிசோதிக்கிறார்கள்.இதனால் நாம் வயதாகும் காலம் தள்ளிப் போகும். டாக்டர் இதைப் பற்றி உற்சாகம் காட்டவில்லை.ஏதோ பயந்த மாதிரி முகம் வெளிறியது.(அட்ரா சக்கை,அட்ரா சக்கை). ஒருவேளை இந்தப் பரிசோதனை வெற்றியடைந்தால் தன் மனைவியின் ஆயுள் கூடுமே என்று பயந்திருக்கலாம்.   

        கொஞ்ச நேரம் போனது. டாக்டர் என்னையோ,நான் டாக்டரையோ தொந்திரவு செய்யவில்லை. பிறகு,நான் டாக்டருக்கு ஊரில் நான் மொபைல் ஃபோனில் எடுத்த trick shots காண்பித்தேன். டாக்டரின் முக பாவனையில் இருந்து அவை அவரை ஆச்சரியப்பட வைத்தன என்று
தெரிந்தது. 
                                          
        காத்து வண்டி(ப்ளேன் தான்) மோட்டார் சிட்டி என்று அழைக்கப்படும் டெட்ராய்டில் தரை இறங்கியது. டாக்டரும் நானும் விடை பெற்றுக் கொண்டோம்.டெட்ராய்டிலிருந்து ட்ராய் அரை மணி நேரத் தரைப் பயண தூரத்தில்.என்னை பிக் அப் பண்ண ஒரு கேப் ட்ரைவர் காத்துக் கொண்டிருந்தார். 

ட்ராய் க்ளைமேட் பற்றி டாக்டர் சொன்னது பேத்தல் என்று பின்னால்
தெரிந்தது.





Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/blog-post_02.html

No comments:

Post a Comment