Sunday, February 27, 2011

சம்பவங்கள் - அர்னால்ட்/க்வாலிட்டி/ட்ரெய்னிங் ஆன் ட்ரெய்னிங்

 அர்னால்ட்
இரண்டு நண்பர்களுடன் ஒரு ரெஸ்டாரண்டில் சமோசா சாப்பிட்டேன். சமோசா சாப்பிட்டு முடித்த போது, ஒரு கப் நிறைய சாஸ் மிச்சமிருந்தது. 'இவ்வளவு மிச்சமாயிருச்சே' என்றேன். ஒரு நண்பர் டோன்ட் ஒர்ரி என்று சொல்லிவிட்டு ஒரு விரலால் மூன்று முறை சாஸ் கப்பில் தொட்டு நக்கினார். மின்னல் வேகத்தில் சாஸ் காலியானது. அந்த வேகத்தைப் பார்த்து நான் அதிர்ந்து போய் சொன்னது, 'நீங்க தான் அர்னால்ட் சாஸ் நக்கர்'.

க்வாலிட்டி 
என்னுடைய முன்னாள் கம்பெனியில் ஒரு நாள், க்வாலிட்டி பற்றி ஒரு இன்டெர்னல் ட்ரெய்னிங் நடந்து கொண்டிருந்தது. ட்ரெய்னிங் எடுத்தவர் முன் வரிசையிலிருந்த ஒரு அழகான இளம்பெண்ணிடம் பத்து நிமிடம் கேனைன் ஸ்பீஸீஸ்( Canine Species) பற்றி பேசிக்கொண்டிருந்தார். எல்லோரும் கடுப்பில் நெளிந்து கொண்டிருந்தனர். க்வாலிட்டி ட்ரெய்னிங்கில் நாய் பூனைக்கு என்ன வேலை.அப்படியே இருந்தாலும் அதை எல்லோரிடமும் சொன்னாலும் பரவாயில்லை. அவர்கள் பேச்சு நாய் பூனையிலிருந்து யானைக்கு மாறியது.
அப்பாடா பேச்சை மாற்றினார்கள் என்ற நிலைமை. ட்ரெய்னிங் எடுத்தவர் மற்றவர்களையும் எங்கேஜ் பண்ண நினைத்து (கில்டி பீலிங்கு!) 'Do you know the difference between Indian and African elephant?' என்று கேட்டார். நான் விரக்தியான   குரலில் 'Nationality' என்று சத்தமாகச் சொன்னேன். அத்தனை பேரின் அடக்கி வைத்த சலிப்பு சிரிப்பாக வெடித்தது.
    அதன் பிறகு க்வாலிட்டி ட்ரெய்னிங் நல்ல முறையில் தொடர்ந்தது.

ட்ரெய்னிங் ஆன் ட்ரெய்னிங்
இதுவும் என் முன்னாள் கம்பெனியில் நடந்த சம்பவம்.
பெங்களூரிலிருந்து ஒருவர் வந்து ஹொவ் டு ட்ரெய்ன் என்று நான்கு நாட்கள் வகுப்பெடுத்தார். அப்போதெல்லாம் ஓஹெச்பி (ஓவர் ஹெட் ப்ரொஜக்டர்) பயன்படுத்தி அதில் ட்ரான்ஸ்ஃபரன்ஸி ஷீட்ஸ் (ஃபாயில்) வைத்து ஸ்கீரில் ப்ரொஜக்ட் செய்வார்கள். முன் வரிசையில் இருப்பவர்களுக்கு ஓஹெச்பி சூடும் அதில் வரும் கெட்ட கெமிக்கல் வாடையும் ஃப்ரீ. 
மூன்றாம் நாள், வகுப்பில் ட்ரெய்னர் ஒரு ஃபாயிலை ப்ரொஜக்ட் செய்து தன் கையிலிருந்த குச்சியால் ஒவ்வொரு வார்த்தையாகச் சுட்டிக் காண்பித்தபடி முதல் வரியைப் படித்தார். அவர் படித்த வரி...
'Do not read from the foil'

No comments:

Post a Comment