Saturday, March 26, 2011

சம்பவம் - தலைச்சாயம்

சமீபத்தில் முடி வெட்டும் கடைக்கு தலைச்சாயம் பூசச்சென்றேன்.கடையில் கைப்பேசியில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. தலையில் சாயம் பூசி முடித்தார் கடைக்காரர். ஒரு பாட்டு முடிந்து அடுத்த பாட்டு தொடங்கி இசை மட்டும் வந்து கொண்டிருந்தது. அப்போது கடைக்காரர் என்னிடம் “ம்யூசிக் போட்றீங்களா?”, என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின் வருமாறு குழம்பினேன். 
”கைப்பேசியில் வரும் ம்யூசிக்கைக் கேட்கிறாரா? நாமளே ஷோலேயில் வரும் சஞ்சீவ் குமார் மாதிரி கையை ஒட்டி வைத்து, சுத்தித் துணி தொங்க ஒக்காந்திருக்கோம். நம்மகிட்ட ஏன் இந்தக் கேள்வி.  நாம வீட்ல் ம்யூசிக் போடுவதை ஒருவேளை தலையைத் தொட்டே தெரிஞ்சுக்கிட்டாரோ”
            பின் டக்கென்று புரிந்தது அவர் கேட்டது என்ன என்று. சாயத்தை “மீசைக்குப் போட்ரீங்களா” என்று சென்னைத் தமிழில் கேட்டிருக்கிறார்.அட “ம்யூசிக்(மீசைக்குப்) போடவா?”ன்னு கேட்டிருந்தாலும் எதில வாசிப்பீங்கன்னு கேட்டிருப்பேன். நல்ல வேளை, தான் சேரில் உட்கார்ந்து கொண்டு, என் தலை மை (லீடர்ஷிப்?!) காயும் நேரம் , “மீசைக்குப் போட்றீங்களா?”, என்று என்னை அவர் மீசைக்குப் போடச்சொல்லாமல் இருந்தார். 

No comments:

Post a Comment