Sunday, April 17, 2011

சம்பவங்கள் - நீண்ட உதவி / டி எம் எஸ் பாட்டு

நீண்ட உதவி
ஒரு நாள் வில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட்
எதிரே நடந்து போய்க்கொண்டிருந்த போது, ஒரு ஆள் வேன் ஒன்றைத் தள்ள
உதவிக்குக் கூப்பிட்டார். மேலும்
இரண்டு பேரும் உதவிக்கு வந்தனர்.
தள்ள ஆரம்பித்து முப்பது அடி(!)
தூரம் தள்ளியிருப்போம். வேன்
ஸ்டார்ட் ஆகிற மாதிரி தெரியவில்லை.('வேனில் என்ஜின் இருக்கிறதா?' என்று சந்தேகம் வந்தது!) அதற்கு முன்னர் தள்ளிய வண்டிகள் நான்கு ஐந்து அடிகளுக்குள் ஓடியிருக்கின்றன். நான் தள்ளிக் கொண்டே,பக்கத்தில் தள்ளிக் கொண்டிருந்த, என்னை உதவிக்குக் கூப்பிட்ட ஆளிடம் கேட்டேன்.“ஏங்க சிவகாசி போகனுமா?”
(சிவகாசி பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்கத்து ஊர்.) நல்ல வேளையாக வேன் ஸ்டார்ட் ஆகிவிட்டது என் கடி பொறுக்காமல்...

டி எம் எஸ் பாட்டு
கல்லூரிப் பணியில் இருந்த போது,
நான் தனியே ஒரு அறையில் தங்கி
யிருந்தேன். ஒரு டிரான்ஸிஸ்டர் தான் பொழுது போக்கு. ஒரு நாள் காலை நேரம் சிலோன் ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தேன். அடுத்த பாடல் ”பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றுமொரு விதம்”,
என்று அறிவித்தார் அறிவிப்பாளர். எனக்கு மிகவும் பிடித்த
டி.எம். எஸ்.பாடல் என்பதால், தாவிக்குதித்து டிரான்ஸிஸ்டர் பக்கத்தில் வந்தேன்.பாட்டு ஆரம்பித்தது. 'பறவைகள் பலவிதம்... ஒவ் ஒவ் ஒவ் ஒவ் ஒவ்'.ரெக்கார்டை சரி செய்யுமுன் பல ஒவ்கள் ஓடி விட்டன. கீறல் விழுந்த ரெக்கார்டை வைத்துக்கொண்டு ஒவ் ஒவ்வென்று என் அபிமானப் பாடகரை குலைக்க வைத்து விட்டார்கள். இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது. நல்ல வேளை 'பறவைகள் கள் கள் கள் கள்...' என்றோ 'பறவைகள் பலவிதம் தம் தம் தம் தம்...' என்றோ கீறல் விழுந்து கிக் வஸ்துகளுக்கு ஓசி விளம்பரம் செய்யாமல் இருந்தார்கள்.

2 comments:

  1. Nice new page look. Makes it much easier on my 43 years old eyes;-)
    Srikanth.

    ReplyDelete
  2. Thanks for the feedback, Srikanth.

    ReplyDelete