Saturday, May 14, 2011

சிறு கவிதைகள் . . . தொகுப்பு 7

வெயில்
மண்டையைப் பிளக்குது
உச்சி வெயில்.
குளம் குட்டையாகி
வெறும் குழியாகுது.
வளர்ந்த பயிர் வாடுது
வறண்டு நீரைத் தேடுது.
"என்ன வெயில் இப்படி அடிக்குது,
நம்ம சனம் எப்படித் துடிக்குது!" என்றேன்.
பாட்டி சொன்னாள்,
"அடிக்கட்டும் நன்றாய்!,
காய்ஞ்சிடும் சீக்கிரம்
மொட்டை மாடியில் போட்ட
வத்தல் வடாம்!"

வரிசை
நீண்ட வரிசை.
இடையில் நான்.
முன்னே பார்த்து விரக்தி!
பின்னே பார்த்து திருப்தி!


ஓட்டை
புவி வெப்பமடைதல் பற்றி
உலக மாநாடு!.
குளிர் சாதன அரங்கத்தில்.
ஓசோன் படலத்தில்
மேலும் இரண்டு ஓட்டைகள்!.

No comments:

Post a Comment