Sunday, February 26, 2012

Photo Album - Degrees of Rotation

These are normal photos rotated in some angles like 90,180 or 270. (No,definitely not 360)





Full Album:  Click here

சிறு கவிதைகள் - தொகுப்பு 25 ( படமா பாடமா?/பொம்மை மனிதன்)

 படமா பாடமா?

சூரியன் உதயம்.
மஞ்சள் வெயில்.
நாணும் வானம்.
மின்னும் மேகம்.
அதுவரை கண்டிரா அற்புதம். 
இயற்கையைச் செயற்கையாய்
பதிவு செய்ய
கேமரா எடுத்து
மாடியில் நின்றேன்.
வானத்தைக் கேமராவின்
கண்ணால் பார்த்துப்
பொத்தானை அழுத்தினேன்.
சார்ஜ் குறைவென்று
படமெடுக்க மறுத்தது கேமரா.
மஞ்சள் வெயில் அற்புதத்தை
வெறுங்கண்ணால் பார்த்து விட
வானம் நோக்கினேன்.
மாறி விட்டிருந்தது வானம்.
போய்  விட்டிருந்தது மஞ்சள் வெயில்.
காத்திருக்காது காலம்.
நிலையானதில்லை வெயில் நிறம்.
வாழ்வைப் புரிந்து
வாழத் தொடங்குமுன்
சார்ஜ் குறைந்துவிடும்
மனித வாழ்வில்
இது புதிதில்லை.

பொம்மை மனிதன்

பெருங்கடை.
வாசலில் பெரும்பொம்மை.
டாட்டா காட்டும் பொம்மை .
குழந்தைகளுக்குக் கை கொடுக்கும்.
பொம்மையின் கையை
வெட்கச்சிரிப்போடு
குழந்தை தொடும்.
சின்ன பயம் போய்
பெரிய சந்தோசம் பெரும்.

புகைப்படத்திற்குப் போஸ்
கொடுக்கும் பொம்மை.
சிரித்த முகம் பொம்மைக்கு.
மனது சிரிக்கும் பார்ப்பவர்க்கு.
வண்ண உடைப் பொம்மை.
உயரமான குண்டு பொம்மை.

நெடுநேரம் நின்று நடந்து ஆடி
மகிழ வைத்த பொம்மை.
இரவில் உருமாறும் மனிதனாய்.
பசியில் களைத்த
மெலிந்த மனிதன்.
சாதாரண உடை.
வேர்வைப் புழுக்கத்தால்
நச நசத்த உணவைத்
தேடும் உடல்.
உடல் களைத்தாலும்
உள்ளம் களைக்கவில்லை
பிறரை மகிழ வைத்த
காரணத்தால்.

சம்பவங்கள் - முதுகு/கோலி ஹாலிவுட்

முதுகு

நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென்று இடுப்பைப் பிடித்துக் கொண்டு இடம் வலமாகத் திரும்பினார்.முதுகை அப்படி இப்படி அசைத்தபடி, "சார்,நீங்க பேசிக்கிட்டே இருங்க.நான் கேட்டுக்கிட்ருக்கேன்.முதுகு பிடிச்சிருக்கு. அதான் இப்படிப் பண்றேன். தப்பா நினைச்சுக்காதீங்க", என்றார்.ஆகா, சாடிஸ்டிக் ஜோக் சொல்லி ரொம்ப நாளாச்சே,நல்ல வாய்ப்பு என்று நினைத்து,அவரின் அனுமதி வாங்கிக் கொண்டு நான் சொன்னது, "இப்ப உங்க உடம்புல உங்களுக்குப் பிடிச்ச இடம் எதுன்னு கேட்டா நீங்க முதுகுன்னு சொல்வீங்க!".

கோலி ஹாலிவுட்

(மேலே உள்ள படத்தில் மேலே உள்ள B யை, K என்று மனதில் மாற்றிக் கொள்ளவும்.நன்றி)

வீட்டில் அழைப்பு மணி அடித்தது. விஷால் யாரென்று பார்க்கச் சென்றான். போன வேகத்தில் கதவைச் சாத்திவிட்டு வந்து விட்டான். யாரென்று விசாரித்த போது, "யாரோ ஏதோ விக்க வந்தாங்க,வேணான்னு சொல்லிட்டேன்" என்றான். நான் சொன்னேன்,"அவரு ஒரு தமிழ் நடிகர் பேரச் சொல்லியிருக்காரு,நீ ஒரு ஹாலிவுட் நடிகர் பேரச் சொல்லியிருக்க போலிருக்கு". சிறிது ஹிண்ட் கொடுத்தவுடன் அவனே கண்டுபிடித்தான். "அவரு சொன்னது 'விக்ரம்', நான் சொன்னது 'வான் டாம்' !"

Saturday, February 25, 2012

Got a blog award - The versatile blogger

Got a blog award  
I thank Indira Mohan for nominating the Versatile blogger award.

The rules for accepting this award are as follows
  1. Nominate 15 fellow bloggers.
  2. Inform the blogger about the nomination.
  3. Share 7 random things about yourself.
  4. Thank the blogger who nominated you.
  5. Add the Versatile Blogger picture to your blog post.
The 7 random things about me.

1. I am a die-hard Bruce lee fan

2. I love Andhra meals
3. I got bronze medal in Cartoon drawing in Madurai Kamaraj university during college days
4. I like summer for its cool breeze at night
5. I love teaching  
6. I like world cinema (Legendary Indian directors,Akira Kurasava,Majid Majidi etc)
7. I was on TV shows twice. one as audience and another as a participant 
  
Nominated 15 bloggers for the versatile blogger award.Informed them individually in person online(!).

சிறு கவிதை - பேருந்துப்பாட்டு


இரவு நேரம்
கடற்கரையை ஒட்டிய சாலை
விரையும் பேருந்து
ஜன்னலோர இருக்கை
முகத்தை வருடும் காற்று
பூமியிலும் கொஞ்சம் சொர்க்கம்


பேருந்தில் ஒலித்த
இளையராஜா பாடல்கள்.
சென்னையை நோக்கி நான்.
என்னை நோக்கிப் பாடல்.


காதில் கிச்சு கிச்சு
மூட்டும்
இக்காலப் பாடல்கள்.
இதயத்திற்குச்
சாமரம் வீசும்
ராஜாவின் பாடல்கள்.


எஸ்.பி.பி, எஸ்.ஜானகியின்
காதல் பாட்டு
தாலாட்டானது.
ராஜாவின் கட்டளையால்!.


பாட்டுக் கேட்டுக் கொண்டு
தூங்கினேனா?
தூங்கியபடி
பாட்டுக் கேட்டேனா?
விடை தெரியாமல்
முழித்தேன்!


பேருந்தை விட்டு
இறங்கினேன்.
மனம் பாட்டோடு
பயணம் தொடர்ந்தது.

Saturday, February 18, 2012

கம்ப்யூட்டர் சேல்ஸ் ரெப் ஒரு கிராமத்திற்குப் போகிறார்


ஒரு கம்ப்யூட்டர் சேல்ஸ் ரெப் ஒரு கிராமத்திற்குப் போகிறார் விற்பனைக்கு. வாங்குபவர் ஒரு ஜாக்கிரதையான கரார் மனிதர்.
கம்ப்யூட்டர் வாங்கும்போது நடந்த உரையாடல்!

கம்ப்யூட்டர் வாங்குபவர்: இந்தப் பொட்டி கிட்டி எல்லாம் நல்லா விரிச்சுக் காமிங்க! 
சேல்ஸ் ரெப்: (விரித்துக் காட்டுகிறார்!)
வா: இது என்னாது கண்ணாடி இருக்கு ஆனா மொகம் தெரியல! 
சே: இது பேர் தான் சார் மானிட்டர் !
வா:இது என்ன சூட் கேஸ், கைல புடிக்க கைப்புடி இல்லாம இருக்கு. தூக்க செரமமா இருக்கும்ல!
சே: இது சி பி யு பாக்ஸ் சார்!
வா: அது சரி! ஏன் நான் கேக்காம டைப் ரைட்டர் கொண்டு வந்தீங்க. எடுத்துட்டு போங்க 
சே: சார் இது தான் கீ போர்டு.
வா: அப்ப சரி இருக்கட்டும். பிள்ளைங்களுக்கு எ பி சி டி, ஒன்னு ரெண்டு சொல்லித்தர பயன் படுத்திக்கலாம்!
இங்க ஏன் சூட் கேஸ்ல நீளமா ஓட்ட இருக்கு!
சே: அது சி டி போடறது சார்!
வா: இங்க சொருகினா, எங்க படம் தெரியும், எங்க சத்தம் வரும்.
சே: விவரிக்கிறார்..
வா: எல்லாத்தையும் கலட்டி காமிங்க!
சே: பாக்ஸ் ஓபன் பண்ணி மதர் போர்டை காட்டுகிறார்
வா: இதென்ன கருப்பா, நீள, நீளமா இருக்கு!
சே: சார் இது தான் மெமரி சிப்ஸ்
வா: இது எதுக்கு எனக்கு. எனக்கு மெமரி ரொம்ப இருக்கு. மத்தது இருக்கட்டும் இது வேண்டவே வேண்டாம்!              
சே: சார் இது என்னோட விசிடிங் கார்டு. நான் வேலைய விட்டுப் போயிட்டதா எங்க கம்பனிக்கு போன் பண்ணி சொல்லீருங்க!   

Photo album - Variety - Digital clicks Feb 2012 - 2





For full album: Click here

Sunday, February 12, 2012

சிறு கவிதை - எதைக் கவிதை பாட?

திறமையை பாதிக்கும்
வறுமையைப் பாடவா?
வறுமையை வளர்க்கும்
திறமையைப் பாடவா?

பழமையை விரட்டும்
புதுமையைப் பாடவா?
புதுமையை வெறுக்கும்
பழமையைப் பாடவா?

முதுமையை நினைக்காத
இளமையைப் பாடவா?
இளமையை மறந்த
முதுமையைப் பாடவா?

பொய்மையை உடைக்கும்
உண்மையைப் பாடவா?
உண்மையை ஒளிக்கும்
பொய்மையைப் பாடவா?

கண் மையைப் பூசும்
பெண்மையைப் பாடவா?
பெண்மையைக் கூட்டும்
கண் மையைப் பாடவா?

வன்மையைத் தூண்டும்
மென்மையைப் பாடவா?
மென்மையைச் சீண்டும்
வன்மையைப் பாடவா?

மடமையை ஒழிக்கும்
கடமையைப் பாடவா?
கடமையை மறக்கும்
மடமையைப் பாடவா?

Saturday, February 11, 2012

Photo album - Only Crows - Digital clicks Feb 2012

I have put more weight.need to start diet from next week
      We help in pollution control. Other issues humans should solve

 I recognize this guy who stoned me last week


Full album: Just a click away

Photo album - Plural - Mobile clicks - Feb 2012

சிறு கவிதைகள் - தொகுப்பு 24

பயங்கள்
சிறு வயதில்
பயமுறுத்திய
பிள்ளை பிடிக்கும்
பூச்சாண்டிகள்
காணாமல் போயினர்
வயதானதும்.

சாப்பிடாவிட்டால்
கண்ணில் மிளகா
வைக்கும்
மீசைக்காரத் தாத்தாவும்
காற்றோடு போய்விட்டார்
காலப்போக்கில். 

அவர்களிடமான
பயத்தை 
நிரப்பி விடுகிறோம்
அவரவர்க்குப் பிடித்த
பயங்களால்.

சோம்பலைச் சாம்பலாக்கு!
நீல வானத்தைச்
சுவராக்கி
ஊக்குவிக்கும்
வாசகச் சுவரொட்டிகளை,
நட்சத்திரங்களை
மறைக்காமல் ஒட்டலாம்.
பூமியின் தரைப்பரப்பில்
ஓர் இம்மி விடாமல்
படித்தவுடன்
நரம்பு முறுக்கேறும்
வரிகளை எழுதலாம்.
உலகக் கடல்களின்
மேலெல்லாம்
பொங்கியெழ வைக்கும்
உரைகளை நுரைகளால்
மிதக்க விடலாம்.
இத்தனை செய்யினும்
இன்னும் எத்தனை
செய்யினும்
உன் சோம்பலைச்
சாம்பலாக்கும்
எரிபொருள்
உன்னிடம் மட்டுமே!

வாழ்க்கையை
வீணாய்க் கழித்தால்
வயதானதும்,
உடல் உட்கார்ந்திருந்தாலும் 
மனசாட்சி விரட்டும்.
அவமானம் துரத்தும்.

உன்னைப் பார்த்து
எறும்புகள் சோர்ந்து 
விடலாமா?

இழுத்தால் இழுபடும்
வில்லாய் இருக்காதே!
சீறிப்பாயும் அம்பாய் இரு!

Wednesday, February 8, 2012

The mystery of the Seed of the Jack fruit is solved

   I visited a friend's home on way to Madurai during 10th standard annual leave. Had lunch at his home. My friend was sitting next to me in the dining table. His father was sitting opposite to me and his mother was serving. The food items were strange to me since they were in Mysore style. After few minutes, when Sambar was served, noticed Jack fruit's seed (palakkottai in Tamil) in it,which was quite familiar to me. 

   In my excitement I forgot that the seed of the jack fruit was very slick. When it is wet it is difficult to grab with fingers. You can even include grabbing that in game shows  like 'Minute to win it'. I told my friend,'At last a known one' and he told me to just enjoy.  In my excitement, grabbed the palakkottai fast, next moment its skin was between my fingers and the main part flew in 45 degrees above my friend's father. I told my friend,'You saw what happened.Where it went?'. He said 'Don't worry'. Luckily both his father and mother didn't notice. Till this day, it was an embarrassing dining table incident I ever had.After that unexpected physics experiment in the dining table, I never get excited about any food item,especially when visiting somebody. 
  The destination of that jack fruit seed, I mean where it landed on that day, was a mystery for so many years. I used to think where it would have gone, when I don't anything else to think. A year back, that friend (now a dentist) clarified that it was found by the maid the next day morning in the dining hall itself.

Friday, February 3, 2012

Bytes from Jan 2012

During channel surfing one day, just watched a serial for few seconds. A lady was walking around a house with evilness in her eyes. That scene was shown in negative with flashing many times. I just asked why should they use too much of negative.My wife commented, "They are symbolically saying she is a negative character!"

 A friend called around Jan mid this year. During the conversation he asked how was the new year. I wanted to say that there was no change and replied, "Everything remains the same except for the calendar!"


Was waiting in a signal in an auto. Vehicles were crossing in the opposite  road. A group of pedestrians who were waiting to cross suddenly started crossing the road when there was a gap in between the vehicles. On seeing them simply ignoring the green signal for the vehicles, I told the auto driver, "They have taken the law in their legs".

We went to the book exhibition in Chennai during Pongal. My wife bought a world map and showed that to me. I told her, "Pl. check whether all the countries are there. This will help you in  understanding the world better!".


My friend and I ordered Mysore bonda in a canteen. While waiting for the bonda to be served, my friend told that Mysore bonda tasted good in Bangalore. I added with, "If you had tasted the Mysore bonda in Mysore, it would have tasted even better"